×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. பெண் மருத்துவருக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நோயாளி.!

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. பெண் மருத்துவருக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நோயாளி.!

Advertisement

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆண், பெண் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பெண் மருத்துவர் இரவு நேர பணியில் இருந்தபோது அவருக்கு காயமடைந்த நோயாளி ஒருவர் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் அருகில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் காயம் அடைந்த நோயாளியை அழைத்து விசாரித்து வருகின்றனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக இதுபோல் பெண் மருத்துவர்களுக்கு பாலியல் மிரட்டல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Sexual Harrasment #Women Doctor harrasment #Kottayam #Govt hospital Kerala
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story