தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தை இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல்... ஆத்திரமடைந்த நபர் எடுத்த கொடூர முடிவு.!

குழந்தை இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல்... ஆத்திரமடைந்த நபர் எடுத்த கொடூர முடிவு.!

panic-in-punjab-neighbors-taunted-for-not-having-a-chil Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை இல்லை என்று கிண்டல் செய்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூன்று பேரை தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சார்ந்த  ரோபின்(46) என்ற நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர்களான மூன்று பேரை  கொலை செய்து இருக்கிறார். அவர்கள் மூன்று பேரும்  ரோபினுக்கு குழந்தை இல்லை என்று தொடர்ந்து கேலி செய்து வந்ததால்  சுத்தியலால் அவர்கள் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்.

India

இந்த சம்பவத்தில் ரோபினால் கொலை செய்யப்பட்ட நபர்கள் சுரிஙந்தர் கவுர் (70), அவரது கணவர் சமன் லால் (75) மற்றும் மாமியார் சுர்ஜித் (90) என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவர்களால் தொடர்ந்து கேலிக்கு உள்ளானதால் அவர்களை சுத்தியலால் அடித்து கொலை செய்ததை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார் ரோபின்.

மேலும் அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியல் மற்றும் இறந்த நபர்களின் செல்போன் ஆகியவையும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தான் சிறைக்குச் சென்றால் தன்னை கவனித்துக் கொள்ள தனது மனைவியையும்  கைது செய்யுமாறு  காவல்துறையினருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் ரோபின். சம்பவம் அப்பகுதியில் பிறப்பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #punjab #Ludhiana #Triplemurder #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story