இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!
pakistan planned to attack in india
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா அவையில் இன்று இரவு விவாதம் நடைபெறும் நிலையில், இவ்விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுரு முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.