இந்தியாவிற்குள் நுழைந்து பாக்கிஸ்தான் தாக்குதல்!! எல்லையில் நிலவும் கடும் பதட்டம்!!
pakistan attaked on india

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை இராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் படி இந்திய இராணுவம் தேடுதல் வேட்டையில் இறங்கியது. இதனையடுத்து பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் தாக்க ஆரம்பித்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்,பாகிஸ்தான் விமானங்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நுழைந்து குண்டு வீசியுள்ளது.