பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்! இந்திய வீரர்கள் வீரமரணம்! எல்லையில் பதட்டம்!
pakistan attacked indian army

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி, இதன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்ய முயற்சி செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
அதேபோல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டதிற்குட்பட்ட குரிஷ் எல்லைக்கோட்டில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.