உயரவிருக்கும் வெங்காய விலை... மத்திய அரசின் அதிரடி உத்தரவு.!
Onion rate will be increase soon

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி திறனும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக உற்பத்தி செய்த பொருட்களை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமலும் போனது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றான வெங்காயத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் வெங்காய வரத்து குறைந்த காரணத்தால் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனால் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் வெங்காயத்தின் கையிருப்பு குறைந்து விலை ஏறும் என்பதால் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது.