இப்படி ஒரு மனுஷனா! உணவே கிடையாது ! 8 லிட்டர்எஞ்சின்ஆயிலை குடித்து உயிர் வாழும் ஆயில் குமார்! வினோத வாழ்க்கை வீடியோ...
கர்நாடகாவில் வசிக்கும் ஆயில் குமார் என்ற நபர், உணவு இல்லாமல் 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீர் குடித்து வாழ்கிறார் என்ற செய்தி உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மருத்துவ உலகையே வியக்க வைத்திருக்கும் ஒரு அதிசய சம்பவம் கர்நாடகாவில் இருந்து வெளிவந்துள்ளது. உணவு எதையும் உட்கொள்ளாமல், தினமும் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து வாழ்கிறார் என்ற செய்தி பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆயில் குமாரின் வாழ்க்கை முறை
கர்நாடகாவின் ஷிவமோகாவில் வசிக்கும் ஆயில் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கடந்த பல ஆண்டுகளாக 7–8 லிட்டர் வேஸ்ட் மோட்டார் ஆயில் மற்றும் தேநீர் குடித்து வருவதாக கூறியுள்ளார். சாதுவின் தோற்றத்தில் அலைந்து திரியும் அவர், இந்த வாழ்க்கை முறை ஐயப்பன் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமாகும் என நம்புகிறார்.
மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மனித உடலுக்கு மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட மோட்டார் எண்ணெயை குடித்தும், ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் இதுவரை எந்த மருத்துவ உதவியையும் தேடியதில்லை என்றும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
சமூக வலைதளங்களில் வைரல்
அவரது வினோதமான வாழ்க்கை முறை சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வைரலாகியுள்ளது. அந்த காட்சியில் மக்கள் அவருக்கு உணவு வழங்கும் போது, அவர் அதை மறுத்துவிட்டு பாட்டிலில் இருந்து நேரடியாக என்ஜின் ஆயிலை குடிக்கும் தருணம் பதிவாகியுள்ளது.
நிபுணர்கள் எச்சரிக்கை
என்ஜின் ஆயிலில் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் கன உலோகங்கள் அடங்கியுள்ளதால், அது மனித உடலின் கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவற்றுக்கு கடுமையான சேதத்தை உண்டாக்கும் என்றும், கோமா மற்றும் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், இந்தியாவில் பேசப்படும் முக்கிய மருத்துவ மர்மங்களில் ஒன்றாக மாறி வருகிறது. ஆயில் குமாரின் கதை, அறிவியல் உலகையே சவாலுக்கு உள்ளாக்கும் வியப்பான உண்மையாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....