வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் குஷியில் பொதுமக்கள்!
offer for new home buyer

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் பல பெரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளன. ஆனால் அந்த குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்தியவர்கள் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு கிடைக்காததால் அச்சத்தில் உள்ளனர்.
பலர் வீடு வாங்குவதற்காக வங்கிகளில் கடன் பெற்று அதற்கான தவணை தொகையை செலுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அவர்களுக்கு வீடு கிடைக்காததால் வாடகை வீட்டிற்கும் பணம் கொடுத்துவிட்டு, வங்கிகளுக்கும் தவணை காட்டும் சூழ்நிலை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் நிலுவையில் இருக்கும் 1,600 வீட்டு வசதி திட்டங்களை முடிக்க உதவும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த தொகையில் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதம் உள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கியும், எல்.ஐ.சி. நிறுவனமும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகளை கொண்ட 1,600 வீட்டு வசதி திட்டங்கள் மீண்டும் தொடங்கவுள்ளன.