பார்க்கும்போதே பதறுதே! ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்! நொடியில் வந்த முதலை! பெண்ணை தண்ணீருக்குள் இழுத்து.... திக் திக் காட்சி!
ஒடிசா மாநில ஜஜ்பூரில் பெண் மீது முதலை தாக்குதல்; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி அதிர்ச்சி.
ஒடிசா மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜஜ்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களின் வாழ்விடங்களுக்கு நெருக்கமாக முதலைகள் திரிவது குறித்து புதிய கவலை எழுந்துள்ளது.
பெண் மீது முதலை திடீர் தாக்குதல்
ஜஜ்பூர் மாவட்டத்தின் பஞ்சர்பூரில் உள்ள கண்டியா கிராமத்தில் காரஸ்ரோட்டா ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் சௌதாமினி (57) என்ற பெண்மணி குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை ஆற்றுக்குள் இருந்து வந்தது. அது வேகமாக வந்து, அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.
மீட்பு நடவடிக்கைகள் தொடங்கிய தீயணைப்பு படை
சம்பவம் குறித்து உடனே தகவல் அளிக்கப்பட்டதால், தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் முதலில் அந்த முதலையை துரத்த முயன்ற போதிலும், அது பெண்ணை ஆழமான பகுதியில் இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நடுரோட்டில் ஆக்ரோஷமாக மாறிய யானை! காரைப் முட்டி கவிழ்த்து பந்தாடிய தருணம்! பகீர் வீடியோ....
வீடியோ வைரலாகி அதிர்ச்சி
காரஸ்ரோட்டா ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேசமயம், சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆற்றுக்கரைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. அரசு மற்றும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பார்க்கும்போது பதறுது! பேருந்து மோதியதில் நொடியில் பலியான 2 பேர்! யாரு மேல தான் தப்பு! பதறவைக்கும் சிசிடிவி காட்சி....