×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு கொடுமை இதெல்லாம்.... மனைவி திரும்பி வர சாமியார் பேச்சை கேட்டு கணவன் செய்த அதிர்ச்சி செயல்! பூஜை அறையில் போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி...! திடுக்கிடும் பின்னணி...!!!

ஒடிசாவில் மனைவி மீண்டும் சேர வேண்டும் என சாமியார் கூறியதாக நம்பி நண்பரை நரபலி கொன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டத்தில் மனைவி மீண்டும் தன்னுடன் சேர வேண்டும் என்பதற்காக நண்பரை நரபலி கொடுத்ததாக நபர் ஒருவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரைத் தேடியபோது, தலையில்லாத நிலையில் அவரது உடல் அருகிலிருந்த குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

காணாமல் போன நண்பர்; தீவிரமான விசாரணை

சந்தோஷ் காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் கடைசியாக நண்பர் சத்ருக்னா சாஹூவுடன் சென்றது தெரியவந்ததை அடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: என்ன ஜென்மம்டா நீ..? பசுவுக்கு காமக்கொடூரனால் அரங்கேறிய அதிர்ச்சி.. ! கொந்தளிப்பை உண்டாக்கும் வீடியோ..!!!

மனைவி திரும்ப வர நரபலி கொடுக்கணும் 

சத்ருக்னா சாஹூவின் மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. மனைவி மீண்டும் தன்னுடன் சேர வேண்டுமெனில் நரபலி கொடுக்க வேண்டும் என்று ஒரு சாமியார் கூறியதாக சத்ருக்னா காவல்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய அவர், நண்பர் சந்தோஷை கொலை செய்து நரபலி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பூஜை அறையில் புதைக்கப்பட்ட தலை மீட்பு

கொலைக்குப் பிறகு சந்தோஷின் உடலை அருகிலிருந்த குளத்தில் வீசியதாகவும், அவரது துண்டிக்கப்பட்ட தலையை வீட்டின் பூஜை அறையில் புதைத்து வைத்ததாகவும் சத்ருக்னா தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி, பூஜை அறையைத் தோண்டினர். அப்போது சந்தோஷின் தலை மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சத்ருக்னா சாஹூவை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சிறையில் அடைத்தனர். Odisha Crime தொடர்பான இந்த வழக்கில், கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் சாமியாரின் பங்கு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மகன் சொன்ன ஒரே வார்த்தை... அடுத்த நொடி ஆத்திரம் தாங்காமல் தாய் செய்த கொடூரம்! விடிய விடிய உடல் அருகே அமர்ந்து போட்ட நாடகம்... பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஒடிசா நரபலி #Odisha crime #சந்தோஷ் கார்செல் #நரபலி கொலை #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story