×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரதட்சணை கொடுமை தவறாக பயன்படுத்தப்படுத்தவாக புகார்.. தொழிலதிபர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபரப்பு வீடியோ.!

வரதட்சணை கொடுமை தவறாக பயன்படுத்தப்படுத்தவாக புகார்.. தொழிலதிபர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபரப்பு வீடியோ.!

Advertisement

தொழிலதிபர் ஒருவர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலா பகுதியில் வசித்து வந்தவர் ராகுல் அகர்வால். தொழிலதிபரான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பர்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி ராகுல் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சனை வாங்கியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ன் கீழ் வரதட்சணை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் ராகுல் பல ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையில், "தனது மாமியார், தனது குடும்பத்திற்கு எதிராக சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் எனவும், தன்னுடைய வயதான பெற்றோர்கள் நீதிமன்றங்களுக்கு வர வேண்டியிருப்பதால் மிகவும் அவதிப்படுவதாகவும் குற்றம்சாட்டி ஒரு வீடியோவை சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் காவல்துறையினர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்ததாகவும், தனது மாமியார் கூறுவதை மட்டுமே உண்மை என நம்பி தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து எனது மனைவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த பிறகும், திருமணத்தில் தலையிட்டு விவாகரத்து கேட்கின்றனர்" என ராகுல் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், ராகுல் தனது மகன் மற்றும் மகளை காண்பதற்காக ஜாம்ஷெட்பூர் காவல்துறை எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததை தொடர்ந்து, மன விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத எண்ணம் எழுந்துள்ளது. இதனால் ஹோட்டலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர் மிகுந்த நாளாக மகன் மற்றும் மகளை காணாததால் மன உளைச்சலில் இருந்துவந்தது தெரியவந்தது. அத்துடன் ராகுலின் சகோதரர் அங்கித்  அகர்வால் மற்றும் அவரது மாமியார் அளித்த தவறான புகாரால் மிகவும் மனமுடைந்த ராகுல், ஹோட்டலின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனால் காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் கடைசி அறிக்கை வரும் வரை குடும்பத்தினரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், புகார் அளித்த மாமியாரை தொடர்பு கொள்ள இயலாததால் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisha #Business man #suicide #dowry
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story