இப்படியா ஆகணும்! இன்னும் 2 நாளில் பிறந்தநாள்.. 2 மாதத்தில் கல்யாணம்! மகனுக்காக காத்திருந்த வீட்டில் பிணமாக வந்த ராணுவ வீரன்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!
நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் வீரர் வி.தேஜா துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். திருமணத்துக்கு முன் சோகம்.
நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் வீரர் வி. தேஜா, எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்தார். 31 வயதான அவர் இன்னும் 2 நாட்களில் பிறந்தநாளைக் கொண்டாட இருந்தார். வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்துக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பிறந்தநாளுக்கு முன் நேர்ந்த சோகம்
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி. தேஜா. அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியாற்றி வந்த அவர், நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 வயது இளம்பெண்ணுக்கு மொட்டை மாடி அறையில் நேர்ந்த கொடூரம்! துர்நாற்றம் வீசியதால் வெளிவந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்..!!!
இன்னும் 2 நாட்களில் தனது 31-வது பிறந்தநாளை கொண்டாட தேஜா தயாராகி வந்தார். அதுமட்டுமின்றி, வரும் டிசம்பரில் திருமணம் நடைபெற இருந்ததால் குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தனர்.
திருமணத்துக்காக காத்திருந்த வீட்டில் இறுதிச்சடங்கு
தீபாவளி பண்டிகையையொட்டி, திருமணக் கொண்டாட்டங்களுக்காக சுமார் 50 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வர தேஜா திட்டமிட்டிருந்தார். அவரை வரவேற்க குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வந்தது மரணச் செய்தி.
பிறந்தநாள் மற்றும் திருமணத்தை எதிர்பார்த்து தயாராகிக் கொண்டிருந்த வீடு, தற்போது இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை எதிர்நோக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இதனால் தேஜாவின் சொந்த ஊரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சோகம் நிலவுகிறது.
மறைவுக்குப் பின்னும் தொடரும் மனிதநேயம்
நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றிய தேஜா, தனது மறைவுக்குப் பிறகும் மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் முடிவை எடுத்திருந்தார். ஏற்கனவே உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இந்த முடிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராணுவ வீரர் தேஜாவின் மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள அவர்கள், நாட்டுக்காக பணியாற்றிய வீரரின் சேவையை நினைவுகூர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: 22 வயது இளம்பெண்ணை வரதட்சணை கொடுமைபடுத்தி கழுத்தை நெரித்து கொன்ற கணவன்! அத்தை வீட்டில் அதிகாலை 5 மணிக்கு நடந்த அதிர்ச்சி...!!!