×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன்றுக்கு தெரியாமல் இன்னொன்று என 14 திருமணம்.. 54 வயது மோசடி மன்னன் பரபரப்பு கைது.! 

ஒன்றுக்கு தெரியாமல் இன்னொன்று என 14 திருமணம்.. 54 வயது மோசடி மன்னன் பரபரப்பு கைது.! 

Advertisement

படித்த இளம்பெண்கள், விவாகரத்து ஆன பெண்கள் என 14 திருமணம் செய்து வாழ்ந்து வந்த 54 வயது நபர் அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கேந்திரா பாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பித்துபிரகாஷ் சலைன் என்ற ரமேஷ் லைன் (வயது 54). இவர் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். உள்ளூரில், தன்னை ஹோமியோபதி மருத்துவர் என்று கூறியும் வலம்வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1982 ஆம் வருடம் ரமேஷ் லைனுக்கு திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவியுடன் 20 வருடம் குடித்தனம் நடத்தியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 2002 ஆம் வருடம் வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, பெண்மணியை 2 ஆவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டாவது மனைவியிடம் முதல் குடும்பத்தை மறைத்து வாழ்க்கை நடத்தியுள்ளார். முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி சேர்த்து 5 குழந்தைகள் உள்ளனர். 2 திருமணம் 5 குழந்தைகள் இருந்தும் ரமேஷ் லைனுக்கு மோகம் தீரவில்லை. 

இதனால் இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் 3 ஆவதாக பெண்ணொருவரை திருமணம் செய்ய முடிவெடுத்து, இணையவழியில் வரன் தேடி விண்ணப்பித்து இருக்கிறார். மேலும், தன்னை மருத்துவர் என்று அரங்கும் செய்து, மத்திய அரசின் குடும்பநலத்துறையில் பணியாற்றி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை நம்நபி பல பெண்கள் ரமேஷை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வந்த விருப்பத்தில் நடுத்தர வயது பெண்ணை தேர்வு செய்து, அவரை 3 ஆவதாக ரமேஷ் லைன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, விவாகரத்தான பெண்கள் மற்றும் வயது அதிகமாகி திருமணம் செய்யாமல் உள்ள படித்த பெண்களை திருமணம் செய்யலாம் என்ற விபரீத யோசனை ரமேஷுக்கு ஏற்பட்டுள்ளது.

2002 ஆம் வருடத்தில் தொடங்கிய விபரீத யோசனையால், ஒவ்வொரு மனைவிக்கும் தெரியாமல் என கடந்த 2018 ஆம் வருடம் வரை படித்த பெண்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியைகள் என 14 பேரை திருமணம் செய்துள்ளார். மேலும், மோசடியில் சிக்காமல் இருக்க வெவ்வேறு மாநிலத்திற்கு சென்றும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணமான சில நாட்களிலேயே பெண்களை தனது முழு கட்டுப்பாட்டில் பேசியே கொண்டு வரும் ரமேஷ் லைன், அவர்களை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு பணம் தேவை என்று கூறி பணத்தை பெற்று கம்பி நீட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படியாக ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர், டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை மயக்கி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில் டெல்லியில் வசித்து வந்த ஆசிரியையுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், அன்று இரவே ஒடிசாவுக்கு வந்து முதலிரவுக்கு நடந்து முடிந்துள்ளது.

அந்த சமயத்திலேயே ஆசிரியையிடம் சாதுர்யமாக பேசி ரூ.10 இலட்சம் ரொக்கம் மற்றும் பணம் வாங்கிய ரமேஷ் லைன், மறுநாளே கம்பி நீட்டி இருக்கிறார். இதனால் ஆசிரியை ரமேஷ் லைன் குறித்து இணையதளத்தில் தேட, பல பெண்களை ஏமாற்றியது அம்பலமானது. இதனையடுத்து, பெண் ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் லைனை தேடி வந்த நிலையில், ஒடிஷாவில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த 11 ஏ.டி.எம், 4 ஆதார் போன்றவரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisha #India #marriage #cheating #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story