×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நர்சிங் மாணவி கொலையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! துடிக்க துடிக்க கிளட்ச் வயரால் கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபர்...! பக்கீ பின்னணி...!!!

பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் செவிலியர் மாணவி ஹரிணி மர்ம மரணம் கொலையாக அம்பலம். காதலை நிராகரித்ததால் பவன் குமார் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் செவிலியர் மாணவி ஹரிணி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலூருபாடு மண்டலம் வேங்கன்னாபாலத்தைச் சேர்ந்த ஹரிணியின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், இது தற்கொலையோ இயற்கை மரணமோ அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.

காதலை ஏற்க மறுத்ததால் தொடர்ந்த தொல்லை

ஹரிணியை பவன் குமார் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது காதலை ஹரிணி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவன் குமார், தொடர்ந்து ஹரிணியை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நர்சிங் மாணவி கொலையில் திடீர் ட்விஸ்ட்..! வீட்டில் தனியாக இருந்த நேரத்தில்... கழுத்தில் பதிந்த தடயங்கள்! அதிர்ச்சி சம்பவம்...!!!

கிளட்ச் வயரால் கழுத்தை நெரித்ததாக தகவல்

சம்பவத்தன்று ஹரிணியை தனியாக சந்தித்த பவன் குமார், மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு ஹரிணி மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த பைக்கின் கிளட்ச் வயரை எடுத்து ஹரிணியின் கழுத்தை நெரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பவன் குமாரை பிடித்து விசாரணை

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற பவன் குமாரை போலீசார் தீவிரமாக தேடி பிடித்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. டிஎஸ்பி ஆதிநாராயணா செய்தியாளர்களிடம் வழக்கின் விசாரணை விவரங்களை வெளியிட்ட நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விளையாட சென்ற 4 வயது குழந்தையுடன் விளையாடிய விதி.... 2 மணி நேரமாக மகளை தேடி அலைந்த பெற்றோர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி... பெரும் சோகம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹரிணி கொலை #Nurse Student Murder #பவன் குமார் #பத்ராத்ரி கொத்தகூடெம் #கிளட்ச் வயர் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story