×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாயா!! அதுவும் முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்குமாம்!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா??

ஒரு மாம்பழத்தின் விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கும் சம்பவம் மக்கள் மத்தியில் ஆ

Advertisement

ஒரு மாம்பழத்தின் விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கும் சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் நூர்ஜகான் என்ற ரக மாம்பழங்கள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த ரக மாம்பழங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை தாயகமாக கொண்டது.

நூர்ஜகான் என்கிற ரக மாம்பழம், இந்தியாவில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் மட்டுமே விற்கபடுமாம். இந்த அலிராஜ்பூர் மாவட்டம் குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளது. அதனால் குஜராத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த ரக மாம்பழங்களை அதிகமாக விரும்பி வாங்கி செல்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு இந்த மாம்பழம் அதிக விலைக்கு விற்கப்பட காரணம் என்னவென்றால் இந்த மாம்பழம் அதிக எடை கொண்டது. இதனால் தான் இந்த விலைக்கு விற்கப்படுகிறது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். மேலும் ஒரு பழம் சுமார் 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடை உள்ளது. அதனால் ஒரு மாம்பழம் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நூர்ஜகான் ரக மாம்பழ விளைச்சல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாம்பழங்களை வாங்க வேண்டுமானால், முன்பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறியிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mango
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story