3 வயது சிறுமியிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
3 வயது சிறுமியிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
கேரளாவில் மூன்று வயது சிறுமிக்கு வட மாநில தொழிலாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாவூரில் 3 வயது பெண் குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 வட மாநில தொழிலாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனால் சிறுமியின் மர்ம உறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இதனை அறிந்த சிறுமியின் தாய் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு வட மாநில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 2 வட மாநில இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.