சத்தமே இல்லாமல் மாஸ் சம்பவம் செய்த DRDO.. அக்னி வி ஏவுகணையை பார்த்து வியந்துபோன மக்கள்..! வீடியோ வைரல்.!
சத்தமே இல்லாமல் மாஸ் சம்பவம் செய்த DRDO.. அக்னி வி ஏவுகணையை பார்த்து வியந்துபோன மக்கள்..! வீடியோ வைரல்.!

வடகிழக்கு மாநிலத்தில் தென்பட்ட வெளிச்சத்திற்கான உண்மை தகவல் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், இன்று இரவு 7 மணிக்கு மேல் திடீரென வானில் பிரகாசமான வெளிச்சம் தென்பட்டது. இதனைக்கண்ட மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகினர்.
தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வீடியோ குறித்து வெளியான முதற்கட்ட தகவலில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அக்னி வி பாலிஸ்டிக் தொலைதூர ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது என்பது உறுதியானது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவுதளத்தில் இருந்து DRDO தனது பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அதுவே மக்களுக்கு பெரிய அளவிலான வெளிச்சம் போல தென்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 5000 கி.மீ - 8000 கி.மீ பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
ஏவுகணையின் பயண தொலைவை மேற்கு வங்கம் மாநில மக்கள் மட்டுமல்லாது, மணிப்பூர் மாநில மக்களும் கண்டுள்ளனர் என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.