நாய்யை கூட்டிட்டு வாக்கிங் போறிங்களா!! அப்போ இந்த வீடியோ பாருங்க!! ரொம்ப கவனம் தேவை!!
நொய்டா கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பில் நடைப்பயிற்சியின்போது பெண் மற்றும் அவரது பக் நாயை கிரேட் டேன் தாக்கியது. படுகாயமடைந்த நாய் சிகிச்சையில் உயிரிழந்தது. உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண்ணையும் அவரது செல்ல நாயையும் ராட்சத கிரேட் டேன் வகை நாய் தாக்கியுள்ளது. செக்டர் 93B-யில் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பு வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த பக் வகை நாய் சிகிச்சையின்போது உயிரிழந்தது. இதையடுத்து, நாய் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்ணைத் தள்ளிவிட்டு பக் நாயைக் கடித்துக் குதறிய கிரேட் டேன்
காலை நேரத்தில் பெண் ஒருவர் தனது சிறிய பக் நாயுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிரேட் டேன் வகை நாய், திடீரென இருவரையும் தாக்கியது. வலிமையான அந்த நாய் பெண்ணைத் தாக்கிக் கீழே தள்ளியதுடன், அவரது செல்ல நாயைத் தனது தாடைகளால் கவ்விக் கடித்தது.
அருகில் இருந்தவர்கள் நாயை விலக்கி, பக் நாயைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், கடுமையாகக் காயமடைந்த அந்தச் சிறிய நாயை உடனடியாக மீட்க முடியவில்லை. பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்க்கவசம் இல்லாமல் வந்த நாய்; குடியிருப்புவாசிகள் அச்சம்
தாக்குதலில் ஈடுபட்ட கிரேட் டேன் நாய் வாய்க்கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு வளாகங்களில் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் நடமாடும் நிலையில், செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது அவசியம் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பெல்ட் பயன்படுத்துவதுடன், தேவையான சூழல்களில் வாய்க்கவசமும் அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மட்டுமின்றி, மற்றவர்களின் பாதுகாப்பையும் நாய் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிமையாளர் மீது நடவடிக்கை கோரிக்கை
தாக்குதலுக்கு ஆளான பெண், 112 மூலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும், குடியிருப்பு வளாகத்தின் நிர்வாகத்திடமும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கோவிலுக்குள் சிறுமிக்கு நடந்த கொடூரம்! வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்... அதிர்ச்சி வீடியோ!!!