×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தயவுசெய்து கீழே இறங்குமா! 2 குழந்தைகளை தவிக்கவிட்டு... போலீஸைப் பார்த்துக் கேலி செய்துவிட்டு.. 5 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்த பெண்! ஷாக் வீடியோ...!!!

தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்த சங்கீதா படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து சங்கீதா என்ற பெண் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த சங்கீதா, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டிடத்தின் உச்சியில் நின்ற பெண்

சாரங்காபூர் மண்டலம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கு ரவி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மக்கள் குடிநீரை வீணாக்கினால் அபராதம்..! ஆனால் அரசு வீணாக்கலாமா..? கொந்தளிப்பை உண்டாக்கும் வீடியோ..!!!

இதற்கிடையே, நிர்மல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியில் சங்கீதா நின்றிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், அவரிடம் பேசி கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர்.

கீழே குதித்ததால் படுகாயம்

ஆனால், காவல்துறையினர் எச்சரித்தும் சங்கீதா கீழே இறங்கவில்லை. போலீசாரைப் பார்த்து கேலி செய்தத நிலையில், திடீரென கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ... புள்ள! சார்ஜிங் போடப்பட்ட எடை மிஷினை தொட்ட 10 மாத குழந்தை பலி! காப்பாற்ற ஓடிய தந்தைக்கும் பாய்ந்த மின்சாரம்.. கதறும் குடும்பத்தினர்..!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நிர்மல் மாவட்டம் #சங்கீதா #கட்டிடத்தில் இருந்து குதிப்பு #Telangana News #Woman Injured
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story