×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரவத்தொடங்கும் நிபா.. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு.. உச்சகட்ட அலர்ட்!

நிபா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

களசோதனை:

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ஒருவருக்கு நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதனிடையே, தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளா - தமிழ்நாடு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு உடைகள் அணிந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

பரவும் நிபா:

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா? எனவும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைக்குப்பின்னரே வாகனங்கள் தமிழகத்துக்கும் அனுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2018ல் கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பரவி வருகிறது. 

ஷிகெல்லா பாக்டீரியா:

இதனிடையே, கேரளாவில் ஷிகெல்லா எனப்படும் வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. இந்த வைரஸால் பள்ளி மாணவி பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் & நண்பர்கள் என 9 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 514 மாணவ-மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவ்வால் எச்சம் அல்லது உமிழ்நீர் இருந்த பழங்களை நன்கு கழுவாமல் அல்லது காய்கறிகளை வேகவைக்காமல் சாப்பிடுவதால் நிபா பரவுகிறது.

அறிகுறிகள்: 

அதிக காய்ச்சல், தலைவலி, தசைவலி, தொண்டை வலி, மயக்கம், வாந்தி, மனக்குழப்பம், மூச்சுத்திணறல். உரிய சிகிச்சை இல்லாத பட்சத்தில் கோமா ஏற்படும்.

இதையும் படிங்க: பெற்றோர்களே கவனம்.. 4 வயது சிறுமி அடினோ வைரசுக்கு பலி.. நெல்லையில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Nipah Virus #தமிழக எல்லை #கண்காணிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story