உயிர் முக்கியமா..? இல்ல பெட்ரோலா..? எந்த நிமிஷமும் வெடிக்கலாம்? லாகோஸில் கவிழ்ந்த பெட்ரோல் டேங்கர் லாரி..! உயிரைப் பணையம் வைத்து பெட்ரோலை அள்ளும் மக்கள் கூட்டம்...! அதிர்ச்சி வீடியோ...!!!
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்த நிலையில், கசிந்த எரிபொருளை மக்கள் ஆபத்தை உணராமல் கேன்களில் சேகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள டின் கேன் லிவர்பூல் பாலத்தில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென கவிழ்ந்தது. திங்கள்கிழமை காலை நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை அப்பகுதி மக்கள் பாத்திரங்கள் மற்றும் கேன்களில் சேகரிக்கத் தொடங்கினர். பெட்ரோல் கசிவு ஏற்பட்ட இடத்திலேயே மக்கள் கூட்டமாக திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவிழ்ந்த டேங்கர்; கசிந்த பெட்ரோலை சேகரித்த மக்கள்
லாகோஸ் நகரின் அபாபா பகுதியில் உள்ள பாலத்தின் மீது டேங்கர் லாரி கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரியில் இருந்த எரிபொருள் பாலத்தின் அடிப்பகுதியில் சொட்டியதுடன், சில இடங்களில் தேங்கியது. இதையடுத்து அங்கு சென்ற மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலை ஜெர்ரி கேன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்டவற்றில் அள்ளிச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் மீட்புக் குழு வரவில்லை என தகவல்
விபத்து நடந்த பிறகும் நீண்ட நேரமாக போக்குவரத்து அதிகாரிகள் அல்லது மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆபத்தான சூழல் நிலவிய நிலையிலும் மக்கள் தொடர்ந்து அங்கு திரண்டதாக கூறப்படுகிறது. பெட்ரோலை சேகரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறிய தீப்பொறி கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்
எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் தீ வேகமாகப் பரவி மிகப்பெரிய வெடிவிபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற நிலையில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் பெட்ரோலை சேகரித்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது. டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட இடத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, பொதுமக்கள் அங்கிருந்து விலகும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!