இப்படியா ஆகணும்? திருமணமாகி 3 மாதம் தான்... இளம் புதுமண தம்பதிக்கு டீ குடிக்கப் போன இடத்தில் காத்திருந்த மரணம்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!!
கர்நாடகாவின் சின்தாமணியில் எலக்ட்ரிக் பைக் மீது ஈகோ கார் மோதிய விபத்தில், திருமணமாகி மூன்று மாதங்களே ஆன சண்முகா, மிதுனா தம்பதி உயிரிழந்தனர். காரில் வந்த மூவர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் சின்தாமணி நகரில் எலக்ட்ரிக் பைக் மீது ஈகோ கார் மோதிய விபத்தில், திருமணமாகி மூன்று மாதங்களே ஆன புதுமணத் தம்பதி உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பெங்களூரு சாலையில் உள்ள யங் ஸ்கை பகுதி அருகே இந்த விபத்து நடந்ததுள்ளது.காரில் பயணம் செய்த மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேநீர் குடிக்கச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்
இந்த விபத்தில் சின்தாமணியைச் சேர்ந்த சண்முகா, அவரது மனைவி மிதுனா ஆகியோர் உயிரிழந்தனர். இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியிருந்தன. சண்முகா, சின்தாமணி எம்.ஜி. சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே செயல்பட்டு வரும் ஸ்ரீநிவாஸ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அர்னாப் புயலின் கோரத்தாண்டவ காட்சி வைரல்..!!!
முதற்கட்டத் தகவல்களின்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருவரும் தேநீர் குடிப்பதற்காக எலக்ட்ரிக் பைக்கில் வெளியே சென்றுள்ளனர். அப்போது பெங்களூரு சாலையில் எதிரே வந்த ஈகோ கார், அவர்களது பைக் மீது மோதியுள்ளது.
விபத்தில் கார் பயணிகள் மூவரும் காயம்
மோதலின் வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. சண்முகா, மிதுனா இருவருக்கும் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈகோ காரில் பயணம் செய்த சூரஜ், அதுல் குமார் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் என மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சின்தாமணி கிராமப்புற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். உயிரிழந்த தம்பதியின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சின்தாமணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்து எப்படி நிகழ்ந்தது, வாகனங்கள் எந்த வேகத்தில் வந்தன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இளம் தம்பதி உயிரிழந்தது, அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இது என்ன அதிசயமா இருக்கு... சேற்றில் சிக்கிய காரை தள்ளும் காளை மாடு..! வைரலாகும் ஷாக் வீடியோ..!!!