அல்ட்ரா மார்டன் பெண்ணை மணந்த கிராமத்து இளைஞன்.! அடுத்த 15 நாளில் உயிரிழந்த துயரம்.! பகீர் காரணம்.!
திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் மரணம்.

மேற்கு வங்க மாநிலத்தில் அந்திசக் கிராமத்தை சேர்ந்த பிரதீம் என்பவர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பிரகத்தி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் புதுமாப்பிள்ளை பிரதீமுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணத்தில் பிரதீமின் பெற்றோருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்தே மர்மமான முறையில் பிரதீம் இறந்திருக்கிறார். அவரை பிரகத்தி தான் கொலை செய்திருக்கிறார் என கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.