×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 1000 ரூபாய் நோட்டுகளா? பீதியில் மக்கள்!

new currency

Advertisement


கடந்த 2016-ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ரூ.2,000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. மேலும் புதிய ரூ.500, ரூ.100 ,ரூ.200நோட்டுகள் அச்சிட்டு வெளியானது.

இந்நிலையில், 2 ஆயிரம் நோட்டுக்கு பதிலாக புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வரப்போகிறது எனவும், 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் எனவும் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டு செல்லாது என புரளி வந்ததையடுத்து  ரிசர்வ் வங்கி, அந்த செய்தி பொய்யானது என்றும் தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகள் கையிறுப்பு இருப்பதாலும், ஆன்லைன் பண பரிவர்த்தனையை அதிகரிக்கவுமே நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், 2 ஆயிரம் நோட்டுக்கு பதிலாக புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வரப்போகிறது என்ற செய்திக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new currency #Rbi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story