×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு பித்தலாட்டம்.... நீட் தேர்வு எழுதும் போது மாணவனுக்கு வந்த திடீர் வயிறு வலி..! நீண்ட நேரம் கழிவறையில் இருந்ததால் அம்பலமான உண்மை..!! காப்பி அடிக்க இப்படி ஒரு ட்ரிக்கா?

ஹைதராபாத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் கழிவறை பிளஷ் டேங்கில் மொபைல் மறைத்து வைத்து காப்பி அடித்த மாணவர் பிடிபட்டார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஹைதராபாத்தில் நடைபெற்ற NEET மறுதேர்வு மையத்தில் அதிர்ச்சி தரும் முறைகேடு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேர்வின்போது கழிவறை பிளஷ் டேங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் மூலம் விடைகளைத் தேடிய மாணவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தேர்வு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

காலை முதலே திட்டமிட்ட நடவடிக்கை

தகவலின்படி, ஹைதராபாத் ராகன்னகூடா பகுதியில் உள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளது. தேர்வு தொடங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே, காலை 7 மணியளவில் மையத்துக்கு வந்த மாணவர், சுற்றுச்சுவர் வழியாக கழிவறை அருகே ஒரு மொபைல் போனை மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் காலை 11 மணியளவில் அந்த மொபைலை ஜிப்-லாக் கவரில் வைத்து கழிவறை பிளஷ் டேங்கிற்குள் ஒளித்து வைத்துள்ளார். பின்னர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு அறைக்குள் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சி... திமுக ஒன்றிய அலுவலக கட்டிட இடிக்கும் பணியின் போது கான்கிரீட் தூண் இடிந்து விழுந்து இளம் நிர்வாகி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!!!

வயிற்று வலி காரணம் கூறி கழிவறைக்கு சென்ற மாணவர்

தேர்வின் போது மேற்கொள்ளப்பட்ட இருகட்ட போலீஸ் சோதனைகளையும் தாண்டி அந்த மொபைல் கண்டறியப்படாமல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவர் தனக்கு வயிற்று வலி இருப்பதாகக் கூறி கழிவறைக்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது, மாணவர் பிளஷ் டேங்கில் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.

கூகுள் மூலம் விடைகள் தேடியது அம்பலம்

சோதனையில், மாணவர் மொபைல் போனில் காப்பி அடித்தல் நோக்கத்துடன் கூகுள் குரோம் வழியாக விடைகளைத் தேடியது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பொதுத் தேர்வுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவரை கைது செய்து, முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: உலகம் கெட்டு போச்சு... ஆண் குழந்தையைப் பெற்ற பிளஸ் 2 மாணவி! அப்பா யாருன்னு கேட்டா ஆடிப்போய்ருவீங்க... பேரதிர்ச்சியில் பெற்றோர்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NEET Re-Exam #ஹைதராபாத் #Mobile phone #தேர்வு முறைகேடு #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story