×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

NEET 2022: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

NEET 2022: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!..

Advertisement

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு,  தேர்வு மருத்துவ படிப்புக்கு தேசிய தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஜூலை 17  ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்  செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது.

மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு கடந்த  6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மே 15ஆம் தேதி (இன்று) வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து  கடந்த 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மேலும் இதுவரை 15-16 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NEET 2022 #Medical Studies #medical college #Entrance Exam #NEET exam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story