×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலை முடிந்து வீடு திரும்பியும் நிம்மதி இல்லை! தூக்கத்தை துளைத்த இளம்பெண் செய்த தரமான சம்பவம்! நள்ளிரவில் அலறிய அதிகாரிகள்.!!!

நவி மும்பையில் தொடர்ந்த மின்வெட்டால் அவதிப்பட்ட இளம்பெண், தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொடர்ச்சியான மின்வெட்டால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தலையணையுடன் நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று நூதன முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அவரது செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உல்வே செக்டார் 8 பகுதியில் வசிக்கும் அந்த இளம்பெண், தினமும் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவதாகவும், மறுநாள் அதிகாலையிலேயே மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர் மின்வெட்டால் அவதி

கடந்த ஒரு வாரமாக நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டதால், அவருக்கு போதிய தூக்கம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: இளைஞரை கட்டாயப்படுத்தி மலம் உண்ண வைத்த கொடூரம்! வாந்தி எடுத்தும் விடல...வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது வேதனையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில், மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் ஓய்வெடுக்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தலையணையுடன் அலுவலகத்திற்கே சென்ற இளம்பெண்

புகார்களுக்குப் பிறகும் மாற்றம் ஏற்படாததால், ஒருநாள் இரவு மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில் அவர் நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்றார். கையில் தலையணையுடன் சென்ற அவர், தனது வீட்டில் மின்சாரம் இல்லாததால் தூங்க முடியவில்லை என்றும், அலுவலகத்தில் மின்சாரம் இருப்பதால் அங்கேயே தூங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த எதிர்பாராத நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த நூதனமான போராட்டம் தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மின்வெட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ மின்சார சேவை தொடர்பான விவாதங்களையும் மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் விஜய் வீட்டை விட்டு வெளியே வராததற்கு இதுதான் காரணம்...! விஜய்யின் அம்மா போட்டு உடைத்த அந்த ரகசியம்! முதல்வர் ஆன பிறகும் இதே ரூல் தானாம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Navi Mumbai #Power cut #viral video #மின்வெட்டு #Electricity Board
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story