×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண் கருவிழியில் தேசியக் கொடி: சாதனை படைத்த பலே ஓவியர்..!

கண் கருவிழியில் தேசியக் கொடி ஓவியம்: சாதனை படைத்த பலே ஓவியர்..!

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம்,  குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி ராஜா, இவர் நமது நாட்டின் 75 வது சுந்தர தினத்தை போற்றும் வகையில் தனது கண்ணில் உள்ள கருவிழியில் நம் நாட்டின் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து அவர் மேலும் அவர் கூறியதாவது, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.

இந்த ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதனை முன்னிட்டு, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நமது தேசத்தையும், தேசிய கொடியை தங்களது கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கருவிழிக்குள் தேசியக்கொடியை வரையும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இதற்காக, கோழி  முட்டையின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும், முட்டையின் ஓட்டிற்கும் இடையில் உள்ள மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இவ்வாறு செய்வதால் கண் விழிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இவ்வளவு சிறிய அளவிலான தேசியக் கொடியை கண்ணுக்குள் பொருத்துவது மிகவும் கடினம். கொடியின் தடிமன் மிகவும் மெல்லியதாக உள்ளதால் கண்ணுக்குள் பொருத்தும் போது, கண்களை அடிக்கடி சிமிட்டினாலோ அல்லது கண்களில் இருந்து நீர் வடிந்தாலோ கொடி கரைந்து விடும். இதனால் பல மணி நேர முயற்சிக்கு பின் வெற்றிகரமாக இந்த கொடியை நான் எனது 2 கண்களின் கருவிழிக்குள் பொருத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#National Flag #75th Independence Day #India #Drawing on Eyes #Coimbatore
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story