குழந்தை இழப்பினால் குறையாத துக்கம்! விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
நாக்பூரில் தாய், மகள் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தற்கொலை கடிதம் மீட்பு; சொத்து தகராறு குறித்த குற்றச்சாட்டில் போலீஸ் விசாரணை தீவிரம்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள வெங்கடேஷ் நகர் பகுதியில் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) ஆகியோர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இழப்பின் துக்கம் பின்னணியா?
ஆகாஷா ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை உயிரிழந்ததால், அவர் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாய் சங்கீதாவுடன் சேர்ந்து தாய் வீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தினரின் தகவலின்படி, இந்த துயரம் அவர்களை மன ரீதியாக பாதித்திருந்தது.
கதவு பூட்டிய நிலையில் கண்டெடுத்த கணவர்
மே 1, 2026 அன்று ஆகாஷாவின் கணவர் வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் ஏற்பட்டதால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: என்னால இனிமே தாங்க முடியாது! 6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை செய்த கொடூரம்! வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தற்கொலை கடிதம் மீட்பு; புதிய கேள்விகள்
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அதில், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும், இறுதிச் சடங்குகளை பண்டாரா மாவட்டம் மௌதா பகுதியில் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆகாஷாவின் கணவர் தொடர்பாக உறவினர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொத்து தொடர்பான பிரச்சினையால் அவர் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த குடும்ப தகராறு கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.