நாளுக்கு நாள் பெரிதாக ஆன வயிறு! கட்டின்னு நினைத்து மருத்துவரிடம் போன நபர்...36 வருஷமா இருந்த மர்மம்! ஆபரேஷன் தியேட்டரில் நடந்த பெரிய ட்விஸ்ட்..... அதிர்ச்சியில் ஆடிப்போன மருத்துவர்கள்...!!!
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்பவரின் வயிற்றுக்குள் 36 ஆண்டுகளாக இரட்டை கருவின் உடல் பாகங்கள் இருந்தது அறுவை சிகிச்சையில் தெரியவந்தது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்ற நபர், தனது வாழ்நாள் முழுவதும் அசாதாரணமாக பெரிய வயிற்றுடன் வாழ்ந்து வந்தார். இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை ‘கர்ப்பிணி’ எனக் கூட கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக அவருக்குள் மறைந்திருந்த உண்மை, 1999-ல் நடந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
36 வயதாக இருந்தபோது சஞ்சு பகத்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்ப பரிசோதனைகளில் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
அறுவை சிகிச்சையில் கண்ட அதிர்ச்சி
அதன்பின் அறுவை சிகிச்சை தொடங்கியபோது, மருத்துவர்கள் எதிர்பாராத காட்சியை பார்த்தனர். வயிற்றுக்குள் கட்டி இல்லை. அதற்கு பதிலாக எலும்புகள், முடி, கை, கால் போன்ற மனித உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதைக் கண்ட மருத்துவர்கள் சில நொடிகள் உறைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் மேற்கொண்ட ஆய்வில், இது மிகவும் அரிதான Foetus in fetu என்ற மருத்துவ நிலை என்பது தெரியவந்தது. இரட்டை குழந்தைகள் கருவில் உருவாகும் போது, ஒரு கரு மற்றொரு கருவுக்குள் சிக்கிக்கொள்ளும் அபூர்வ நிலையே இது.
36 ஆண்டுகள் வயிற்றுக்குள் இருந்த இரட்டை கரு
தகவலின்படி, சஞ்சு பகத் தனது இரட்டைச் சகோதரனின் வளர்ச்சி அடையாத கருவை 36 ஆண்டுகளாக வயிற்றுக்குள் சுமந்து வந்துள்ளார். உலகளவில் மிக அரிதாக மட்டுமே பதிவாகியுள்ள இந்த நிலை, மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சஞ்சு பகத் உடல்நலமாக மீண்டார். ஆனால், தனது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட அந்த உருவத்தை பார்க்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்றும் இந்த சம்பவம் மருத்துவ அதிசயம் எனப் பேசப்பட்டு வருகிறது.