×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிப்பாவீங்களா... கழிப்பறைக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம்! மாணவியின் ஆடையை கழற்றி, முடியை வெட்டி சித்திரவதை... அதிர்ச்சி வீடியோ!!!

நாகாலாந்தில் பயிற்சி மைய கழிப்பறைக்குள் மாணவியை சக மாணவிகள் தாக்கி, முடியை வெட்டி சித்திரவதை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாகாலாந்தின் மொன் மாவட்டத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் சக மாணவிகளால் கழிப்பறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆடைகளை கிழித்து, முடியை வெட்டி சித்திரவதை செய்ததுடன், அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

கழிப்பறைக்குள் வைத்து மாணவிக்கு கொடூர தாக்குதல்

பயிற்சி மையத்தின் கழிப்பறைக்குள் மாணவியை தனியாக அழைத்துச் சென்ற சில மாணவிகள், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின்போது அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டதுடன், கத்தரியால் முடியும் வெட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் சித்திரவதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அடேய்.. என்னடா பண்றீங்க! ஓடும் பிக்-அப் டிரக்கில் பின்புறம் தொங்கிய 2 சிறுவர்கள்..! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வு

மாணவியை தாக்கிய காட்சிகளை அந்தக் குழுவினர் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீடியோ வேகமாக பரவி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

போலீசார் தீவிர விசாரணை

வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கவனம் பெற்ற நிலையில், போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவிகள் யார், சம்பவத்திற்கான பின்னணி என்ன, வீடியோவை இணையத்தில் பகிர்ந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பள்ளியிலே இப்படி ஒரு காட்சியா? வெள்ளரிக்காய் VS காண்டம் பயன்படுத்தி பாலியல் பாடதிட்டத்தை கற்பித்த உயிரியல் ஆசிரியர்! 2 கோடி பார்வைகளைக் கடந்த வைரலாகும் வீடியோ...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நாகாலாந்து மாணவி #Nagaland Student Assault #பயிற்சி மையம் #viral video #மாணவி தாக்குதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story