×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா பரிசோதனை செய்ய அதிகபட்சம் ரூ. 4,500..! தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியது அரசு.!

NABL approved private labs allowed to test coronovirus

Advertisement

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை 7 பேர் இந்தியாவில் கொரோனாவால் உயிர் இழந்துள்ள நிலையில் 300 கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்காக தயார்படுத்தப்பட்ட ஆய்வகங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது NABL அனுமதி பெற்ற தனியார் ஆய்வகங்களும் கொரோனா பரிசோதனை கெற்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனை கட்டணம் 4,500 ரூபாய்க்கு மேல் வசூலிக்க கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களை ஆய்வகங்களுக்கு வரவைத்து இரத்த மாதிரிகளை சேமிப்பதைவிட, அவர்கள் வீட்டிற்கே சென்று இரத்த மாதிரிகளை சேகரிக்கும்படியும், இரத்தம் சேகரிக்கும்போதும், ஆய்வு மேற்கொள்ளும்போதும் மிகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #Private labs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story