×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: தட்டம்மை பாதிப்பால் சிறுமி மரணம்; 200 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 

#BigNews: தட்டம்மை பாதிப்பால் சிறுமி மரணம்; 200 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 

Advertisement

 

மும்பை மாநகரில் 24 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சிறுமி ஒருவர் அந்நோயால் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பையில் 24 பேருக்கு தட்டம்மை உறுதியான நிலையில், புறநகர் பகுதியான கோவண்டியில் சிறுமி தட்டம்மையால் உயிரிழந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

கடந்த ஜனவரி 2022ல் இருந்து தட்டம்மை நோயால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து 24 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தட்டம்மை பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறும், சொறி போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai #maharashtra #India #Minor Girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story