75 வயசு ஆனா வேலை கொடுக்க மாட்டாங்களா? உழைப்புக்கு எதுக்குங்க வயசு.... வெயிலிலும் வியர்வையிலும் மிக்கி மவுஸ் டிரஸ் போட்டுட்டு பீச்சில் உலா வரும் தாத்தா! தோளோடு தோள் நிற்கும் மனைவி... கண்ணீர் வர வைக்கும் காட்சி!!!
மும்பை ஜுஹு கடற்கரையில் 75 வயதான முதியவர் மிக்கி மௌஸ் வேடமிட்டு வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
மும்பையின் ஜுஹு கடற்கரையில் 75 வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மிக்கி மௌஸ் வேடமிட்டு வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் குடும்பத்தை நடத்த அவர் மேற்கொள்ளும் முயற்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
வயது காரணமாக வேலை மறுக்கப்பட்ட நிலை
ஆராதனா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், வயது காரணமாக யாரும் வேலை வழங்காததால், குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் மிக்கி மௌஸ் உடை அணிந்து கடற்கரையில் புகைப்படம் எடுத்து வருவதாக அந்த முதியவர் கூறியுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானமே அவரது அன்றாட செலவுகளுக்கு ஆதாரமாக உள்ளது.
கடும் வெயிலிலும் தொடரும் உழைப்பு
கனமான உடையை அணிந்தபடி ஜுஹு கடற்கரையில் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்குப் பதிலாக பெற்றோர்கள் அவரது பெட்டியில் செலுத்தும் பணமே குடும்பத்தின் முக்கிய வருமானமாக இருக்கிறது. உடைக்குள் வியர்வையில் நனைந்திருந்தாலும், வெளியே குழந்தைகளுக்கு புன்னகையுடன் சேவை செய்வது வீடியோவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: என்னம்மா நீங்க....இப்படி பண்றீங்களேம்மா! ஆடையை அணிந்து கொண்டே பாயல் ராஜ்புட் நடிகை செய்யுற வேலையை பாருங்க.... வைரல் வீடியோ!!!
மனைவியும் தோளோடு தோள் நின்ற ஆதரவு
தகவலின்படி, அவரது மனைவியும் அதே கடற்கரையில் பலூன்கள் விற்று குடும்பச் செலவுக்கு துணை நிற்கிறார். முதிய வயதிலும் இருவரும் இணைந்து நடத்தி வரும் இந்த வாழ்வாதாரம் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்தத் தம்பதியினரின் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.