×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரியாணிக்குப்பின் தர்பூசணி சாப்பிட்டு குடும்பமே பலியான விவகாரம்.. வெளியான உண்மை.. முழு விபரம்.!

Mumbai Family Death Watermelon Case Latest Update: தர்பூசணி பழம் சாப்பிட்ட குடும்பத்தினர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மை அம்பலமாகியுள்ளது.

Advertisement

குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு பிரியாணி சாப்பிட்ட பின்னர் தர்பூசணி சாப்பிட்டது தான் காரணமா? என்ற விஷயத்துக்கு பதில் கிடைத்துள்ளது.

குடும்பமே பலி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்தவர் அப்துல்லா டொகாடியா (வயது 40). இவரின் மனைவி நஸ்ரின் (வயது 35). தம்பதிகளுக்கு ஜைனப் (வயது 13), ஆயிஷா (வயது 16) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறவினர்கள் சிலரை அழைத்து மட்டன் புலாவ் விருந்து வைத்துள்ளனர். பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றபின்னர், அதிகாலை சுமார் 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் கணவன் வேலை.. ஆண் நண்பரால் பெண்ணுக்கு பிரசவ வலி.. நடந்த வினோத சம்பவம்.!

உணவு விஷமானதா?

அதனைத்தொடர்ந்து, அதிகாலை 5 மணியளவில் குடும்பத்தினர் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிலமணிநேரத்திற்குள் உயிரிழந்து இருக்கின்றனர். இத விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பிரியாணி சாப்பிட்டபின் தர்பூசணி சாப்பிட்டதால் குடும்பமே மரணம் என்ற விஷயம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. மருத்துவர்கள் இவ்வாறான மரணத்துக்கு அதிகபட்சம் சாத்தியமில்லை என்று கூறினாலும், உணவு விஷமாக மாறியிருந்தால் அதுவும் ஒரே நாளில் மரணம் வரை செல்லாது என கருத்து தெரிவித்தனர்.

எலி நச்சு உறுதி:

இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இறக்க தர்பூசணி காரணம் இல்லை. அதில் கொடிய எலிக்கொல்லி மருந்து இருந்துள்ளது. அதனை சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலில் எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் துத்தநாக பாஸ்பைட் நச்சு இருந்துள்ளது. இந்த ரசாயனம் பழத்தில் செலுத்தப்பட்டதா? அல்லது குடும்பத்தினர் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த வார சோதனையின்போதே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடல் பாகங்களாக மூளை, இதயம், குடல் பச்சை நிறத்துடன் இருந்துள்ளன. விருந்துக்குச் சென்ற குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: சொந்த பேத்தியை சீரழித்து கொன்ற தாத்தா.. நெஞ்சை திடுக்கிடவைக்கும் துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai #Family suicide #பிரியாணி தர்பூசணி #மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story