×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா சிகிச்சை! கவச உடையில் கலக்கலாக நடனமாடிய இளம் பெண்மருத்துவர்! தீயாய் பரவும் வீடியோ!

Mumbai doctor dance in PPE kit

Advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய வைரஸை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மேலும் அசுர வேகத்தில் பரவிவரும் கொடிய கொரோனா வைரஸை குணப்படுத்த மருத்துவர்கள் இரவுபகல் பாராமல் போராடி வருகின்றனர். 

 இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களை உற்சாகப்படுத்த வகையில்,  மும்பையில் கொரோனா சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் ரிச்சா நேகி என்பவர் கவசஉடை அணிந்து சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரிச்சா நேகி, ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு  நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்  கடுமையான காலங்களிலும் எதிர்மறையான எண்ணங்கள் இன்றி, மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள முடியும் என்பதற்காகவே கவச உடையிலும் நடனம் ஆடியதாக அவர் கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #doctor #dance
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story