தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்டி பண்றீங்களேமா.... கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, தல தோனி புகைப்படங்கள்.!

இப்டி பண்றீங்களேமா.... கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, தல தோனி புகைப்படங்கள்.!

Ms dhoni and modi photos in exam admit card Advertisement

பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அந்த கல்லூரிகளில், பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், பொதுவாக மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும்.

ஆனால், சில குறும்புக்கார மாணவர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #Msd #Admit card
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story