ஒரு கையில் ட்ரிப்ஸ் மருந்து பாட்டில்! இடது கையில் சிரஞ்சியுடன் தெருவில் நடக்கும் நோயாளி!
மத்தியப் பிரதேசம் ஷிவ்புரியில் நோயாளி சொட்டு மருந்து பாட்டிலுடன் தெருவில் சுற்றிய வீடியோ வைரலாகி, சுகாதார துறை அதிர்ச்சியில் விசாரணை தொடங்கியது.
இந்தியாவின் சுகாதார அமைப்பின் குறைபாடுகள் சில சமயங்களில் சமூக ஊடகங்களில் வெளிப்படுகின்றன. அதில் சமீபத்தில் வெளிவந்த ஷிவ்புரி வைரல் வீடியோ ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் நம்பிக்கையை சுகாதார துறையிடமிருந்து தள்ளிவிட்டது என்றே சொல்லலாம்.
சொட்டு மருந்துடன் தெருவில் சுற்றிய நோயாளி
மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம் சிர்சாத் கிராமத்தில், சுகாதார சேவைகளின் மோசமான நிலையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நடந்துள்ளது. ஒரு நோயாளி தனது வலது கையில் சொட்டு மருந்து பாட்டிலையும், இடது கையில் சிரிஞ்சையும் பிடித்துக்கொண்டு தெருக்களில் அலைந்து திரிந்தார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பதிவாகி, வேகமாக பரவி வருகிறது.
போலி மருந்தாளரின் ஆபத்தான சிகிச்சை
அந்த நோயாளி உடல்நலக்குறைவால் ஒரு போலி மருந்தாளர் மூலம் சிகிச்சை பெற்றதாகத் தெரியவந்துள்ளது. அவர் நோயாளிக்கு சொட்டு மருந்து பொருத்தி, எந்த மேற்பார்வையும் இன்றி அவரை வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளி சொட்டு மருந்தை கையிலே எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
அதிகாரிகள் தொடங்கிய விசாரணை
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் ரிஷிஷ் கூறுகையில், “நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். வைரலாகியுள்ள வீடியோவையும் பார்த்துள்ளோம்,” என்றார். மேலும், இது ஒரு தனியார் மருத்துவமனைக்கு தொடர்புடைய வழக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம், கிராமப்புற சுகாதார சேவைகளின் தரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அரசும் சுகாதாரத் துறையும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த சுகாதார சேவை குறைபாடுகள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: ச்சீ... காமத்தின் உச்சம்! பிணத்தை கூட விட்டு வைக்காத வாலிபர்! பிணவறையில் பெண்ணின் சடலத்திடம் செய்த அருவருப்பான செயல்!