×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு வில்லத்தனம்! பூங்காவில் விளையாடிய சிறுமியிடம் கரடி பொம்மை காட்டி கூட்டிச் சென்ற நபர்! அடுத்தநொடி வந்த தாய்! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு...

மத்தியப் பிரதேசத்தில் 2.5 வயது சிறுமியை கடத்த முயன்ற இளைஞனை தாய் தைரியமாக தடுத்து நிறுத்தி காப்பாற்றிய பரபரப்பான சம்பவம், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

Advertisement

சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் சமூகத்தில் அவசியம் என்பதைக் காட்டும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பூங்காவில் விளையாடிய சிறுமி மீது தீய நோக்கம்

சட்னா மாவட்டம் பர்ஹுத் நகரில் வசிக்கும் குடியா கேவத், நேற்று மதியம் வேலைக்குச் சென்றபோது தனது இரண்டரை வயது மகளை அருகிலுள்ள ராமேஸ்வரம் கோயில் பூங்காவில் விளையாட விட்டுச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கிடமான இளைஞன், கரடி பொம்மை கொடுத்து சிறுமியை ஏமாற்றி அழைத்துச் செல்ல முயன்றார்.

இதையும் படிங்க: வீட்டில் ஒன்றரை வயது குழந்தைக்கு நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கடலூரில் பரபரப்பு...

தாயின் விழிப்புணர்வால் தப்பிய பெரும் ஆபத்து

அந்த நேரத்தில் அங்கிருந்து திரும்பிய தாய் குடியா கேவத், தனது மகளை அந்நிய இளைஞர் தூக்கிச் செல்வதை பார்த்ததும் உடனடியாக ஓடி அவரை தடுத்து நிறுத்தினார். பயத்தில் தன்னைத் தப்பிக்க முயன்ற அந்த நபர், குழந்தை தன்னுடையதே என்று பொய் கூறியபோதும் தாய் தைரியமாக சத்தமிட்டார்.

உதவிக்கு மக்கள் திரண்டு குற்றவாளி தப்பியோட்டம்

தாயின் அலறல் கேட்டுச் சம்பவ இடத்திற்கு மக்கள் கூடினர். கூட்டத்தால் சூழப்பட்டதை உணர்ந்த குற்றம் சாட்டப்பட்ட இளைஞன், சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் இந்த சம்பவம், பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததாக அனைவரும் கருதுகின்றனர்.

 

இதையும் படிங்க: திடீரென காணாமல் போன 3 வயது குழந்தை! தேடி அலைந்த பெற்றோருக்கு தொழிற்சாலை அருகே காத்திருந்த பேரதிர்ச்சி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#MP Child Rescue #தாய் தைரியம் #Kidnap Attempt #tamil news #CCTV Footage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story