×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊதாரி காதல் கணவனால் குழந்தைகளை கொன்று தாய் விபரீதம்.. கடிதத்தில் உருக்கமான தகவல்.!

Andhra Pradesh Crime: ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூரில் மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டது.

Advertisement

வீட்டுச்செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், பெண் தற்கொலை செய்துகொண்டார். 2 குழந்தைகளை கொலை செய்து இந்த விபரீத முடிவை எடுத்தார்.

காதல் திருமணம்:

ஆந்திரப் பிரதேசம் மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் சிவசங்கர். இவர் ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் வேலை செய்து வருகிறார். ஆனால், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை வழங்கவில்லை. சிவசங்கரின் மனைவி பத்மா (வயது 32) கணவரால் கடுமையான மனவேதனையை எதிர்கொண்டுள்ளார். இதனால் தனது 7 வயது மகள் தேஜாஸ்ரீ மற்றும் 5 வயது மகள் லாஸ்யாவை கொன்று, தானும் தற்கொலை செய்தார். காதல் திருமணம் செய்த தம்பதியில் கணவரின் செயலால் விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

காவல்துறை விசாரணை:

சம்பவம் நடைபெறும் நேரத்தில் வீடு திரும்பிய சிவசங்கர், மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பிறகு போலீசார் உயிரிழந்தோரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

கடிதத்தில் உருக்கமான தகவல்:

அப்போது, பத்மா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அதில், "பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணின் வாழ்க்கைக்கு இதுதான் பாடமாகும். வீட்டுச் செலவுகளுக்குப் பணம் கேட்காத பெண்ணை சந்தோஷப்படுத்த வேண்டும். என் வாழ்க்கை போல இன்னொருவரின் வாழ்க்கையை நாசப்படுத்தாதே. அண்ணா என்னை மன்னித்து விடுங்கள். உங்களிடம் பேசாததால் அன்பு இல்லையென அர்த்தம் இல்லை. ஒரே ஒரு தடவை பாப்பா என்று கூப்பிடுங்கள்" என தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #Mother Kills Children #suicide #ஆந்திரப் பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story