×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகள் மர்ம மரணம்... 10 வயது மகன் கூறிய தகவலால் திடீர் திருப்பம்!

மருமகள் மர்ம மரணம்... 10 வயது மகன் கூறிய தகவலால் திடீர் திருப்பம்!

Advertisement

பீகார் மாநிலத்தில் மாமியார் மருமகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீஹார் மாநிலத்தை சேர்ந்த அனில் ராய் என்பவருக்கு ப்ரீத்தி குமாரி என்ற 25 வயதான மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10  வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே குடும்பத்தில் மாமியார்- மருமகளிடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஜூலை 7ம் தேதி இரவு ப்ரீத்தி குமாரி தனது சகோதரர் ராகவ் குமாருடன் செல்போனில் வீடியோ கால் பேசியுள்ளார். அதன் பின்னர் வீட்டில் வேலை இருப்பதாக கூறி செல்போனை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன்.. தடையமே இல்லாமல் முடித்த மனைவி!

இரந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் ராஜஸ்தானில் இருந்து ப்ரீத்தியின் கணவர் அணில் ராய் உறவினர்களுக்கு போன் செய்து ப்ரீத்தி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஓடிவந்த ப்ரீத்தி குடும்பத்தினர் வீட்டில் சடலமாக கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதனிடையே ப்ரீத்தியின் மாமியார் மற்றும் மற்றும் ஒரு உறவினர் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு நிம்மதியாக தூங்கியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ப்ரீத்தியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ப்ரீத்தியின் 10வது மகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாமியார் தனது மருமகளுக்கு வலு கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மருமகளை கொலை செய்த மாமியாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன்.. தடையமே இல்லாமல் முடித்த மனைவி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bhihar #Crime news #Crime #killed #poison injection
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story