×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இருமல் மருந்துன்னு சொல்லி அம்மா ஏதோ கொடுத்தாங்க..! இறப்பதற்கு முன் தங்கைகளை காப்பாற்ற துடித்த அக்காவின் பகீர் வாக்குமூலம்... இறுதியில் பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தைகள்..!!!

மத்தியப் பிரதேசத்தில் மன உளைச்சலால் மூன்று மகள்களுக்கு விஷம் கொடுத்து, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்ட தாயின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிர்வா கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 32 வயதான அனிதா சிங் மற்றும் அவரது மூன்று பெண் குழந்தைகளும் உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வசித்து வந்த குடும்பம்

தகவலின்படி, லாரி ஓட்டுநரான அனிதா சிங்கின் கணவர் வேலை காரணமாக ஹைதராபாத்தில் தங்கி வந்துள்ளார். இதனால், அனிதா தனது 7, 4 மற்றும் 2 வயது மகள்களுடன் ஹிர்வா கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அனிதா, தனது குழந்தைகளுக்கு இருமல் மருந்து எனக் கூறி பூச்சிக்கொல்லி விஷத்தைக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கோயில் கழிவறைக்குள் சென்ற 2 சிறுமிகள்! ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரல...செல்போனைத் திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ! நடந்தது என்ன?

வீட்டில் தீ வைத்து தற்கொலை

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பிறகு, வீட்டில் இருந்த உடைகள், முக்கிய ஆவணங்கள், குடும்பப் புகைப்படங்கள் மற்றும் தானிய மூட்டைகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அவரும் அதே விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதற்கிடையே, விஷத்தின் தாக்கம் முழுமையாக ஏற்படாததால் 7 வயது மூத்த மகள் ரித்திகா மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மரண வாக்குமூலத்தில் வெளிவந்த தகவல்

பின்னர் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு அனிதா சிங் மற்றும் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு போராடிய ரித்திகாவும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

சாவதற்கு முன் ரித்திகா அளித்த மரண வாக்குமூலம் மூலமாகவே நடந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வறுமை, குடும்பப் பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஹிர்வா கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #அனிதா சிங் #Poison Tragedy #குழந்தைகள் உயிரிழப்பு #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story