தாயின் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 6 வயது மகன் கொலை.. ஆண் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல்.!
6 வயதுடைய மகனை கொலை செய்ததாக தாய், அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடத்தல் புகார்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், பாசுமா பகுதியில் கடந்த 16ம் தேதி, குர்பிரீத் கவுர் என்ற பெண்மணி தனது 6 வயது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், முசாபர்நகரில் வசித்து வரும் அரபிக் பராஷர் என்பவர் தனது மகனை காரில் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!
கள்ளக்காதலால் கொலை:
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அரபித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அரபிக் - கவுர் இடையே கள்ளக்காதல் உறவு இருந்தது தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதலுக்கு சிறுவன் இடையூறாக இருந்ததால், மகனை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது.
இருவரும் கைது:
மேலும், சிறுவனின் உடலை அஸ்தினாபூர் வனப்பகுதியில் மறைத்து வைத்து ஊராரை நம்பவைக்க நாடகமாடி காவல் நிலையத்திலும் புகார் அளித்தது அம்பலமானது. கொலை சம்பவம் உறுதியானதைத் தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!