தாயும், மகளும் ஒரே நபருடன் கள்ள உறவு..! கண்டுபிடித்த தந்தை..! தாயின் கட்டளைப்படி தந்தையை கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த மகள்..!
Mother and daughter have relationship with a men and killed father

தாயும், மகளும் ஒரே இளைஞருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் கண்டித்த கணவனை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டின் முற்றத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்த கைலு தாஸ் (35 வயது) தனது மனைவி சரிதா தேவி, மகள் ஜூலி மற்றும் இளைய மகன் தேவ்நந்தன் ஆகியோருடன் வசித்துவந்துள்ளார். சிறிய மளிகைக்கடை மற்றும் ஹோட்டல் ஒன்றை குடும்பத்தினர் நடத்திவந்தநிலையில், தினேஷ் யாதவ் என்ற இளைஞருடன் சரிதாவிற்கும் அவரது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த தகவல் கைழுதாஸிற்கு தெரியவர அவர் மனைவி மற்றும் மகளை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இவர்களிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் தாய், மகள் இருவரும் சேர்ந்து கைலு தாஸை கொலை செய்து வீட்டின் முற்றத்தில் புதைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தனது தந்தையை காணவில்லை என அவரது மகன் தேவ்நந்தன் தனது தாய் மற்றும் சகோதரியிடம் கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. ஊர்மக்களுக்கு கைலு தாஸ் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.
இதனை அடுத்து தேவ்நந்தன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இதனிடையே வீட்டின் முற்றத்தில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தநிலையில் போலீசார் வீட்டை தோண்டி சோதனை செய்தபோது உள்ளே கைலு தாஸ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து தாய் மற்றும் மகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சிற்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.