×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உச்சக்கட்ட கொடூரம்! திருவிழாவிற்குச் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! ஒரு நாளைக்கு பின்.. சுயநினைவின்றி பாழடைந்த வீட்டில் கிடந்த பெண்... பகீர் சம்பவம்!!!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தில் நவமி விழாவுக்குச் சென்ற தலித் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் நவமி திருவிழாவுக்கு சென்ற தலித் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திலாரி காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவிழாவுக்கு சென்ற பெண்ணை கடத்திச் சென்றதாக புகார்

பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரருடன் கிராமத்தில் நடைபெற்ற நவமி திருவிழாவை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் பெண்ணை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆள்நடமாட்டம் இல்லாத கரும்புத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொண்ணுங்களுக்கு தான் ஆபத்துன்னா இப்போ ஆண்களுக்குமா? 8 வயது சிறுவனை விளையாட கூட்டிட்டு போய் 2 வாலிபர்கள் செய்த கொடூரம்! வலி தாங்க முடியாமல் தாயிடம் கதறி அழுத மகன்.! பகீர் சம்பவம்..!!!

அங்கு சுமார் 24 மணி நேரம் பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ககன் என்பவரும் அங்கு வந்து குற்றத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த வீட்டில் பெண்ணை விட்டுச் சென்றதாக தகவல்

நீண்ட நேரத்துக்குப் பிறகு சுயநினைவிழந்த நிலையில் இருந்த பெண்ணை கிராமத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் சுயநினைவு திரும்பிய பெண், படுகாயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். நடந்தவற்றை பெற்றோரிடம் அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் காவல்துறையை அணுகியுள்ளனர்.

விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பஞ்சாயத்து மூலம் பேசி பிரச்சினையை முடித்துக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிலர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு குடும்பத்தினர் சம்மதிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல் அதிகாரி முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவரது புகாரின் அடிப்படையில் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மூவரின் பங்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: காட்டுக்குள் கண்டப்படி கிடந்த கணவன், மனைவியின் சடலம் .! விசித்திரக் கோலத்தில் கணவன்... மனைவியின் அரைநகன் உடல்..! பின்னணி என்ன? பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மொராதாபாத் சம்பவம் #தலித் பெண் #பாலியல் வன்கொடுமை #uttar pradesh crime #Moradabad News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story