கொரோனா தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம்..! மோடி அதிரடி.!
Modi talk about corona

கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. இதனையடுத்து இந்தியாவில் ஓரளவுக்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் இங்கு சமூக பரவல் அதிகரிக்கவில்லை என்றும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் தொடர்பாக அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். கொரோனா குறித்து பரிந்துரைகளை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.