×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீகாரின் வளர்ச்சிக்கு யார் காரணம்.? ஓப்பனாக பேசிய பிரதமர் மோடி.!

பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement


நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தஇலையில் அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டது. அங்குள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மெகா கூட்டணி 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி அம்மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #Bihar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story