×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி!

modi request to people

Advertisement

வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அவரது டுவிட்டர் பதிவில், வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள், என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும், அதில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை என கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தந்து யாரும் வீட்டை விட்டு வெளியேவராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இந்தநிலையில், நாடு முழுவதும் மக்கள், ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தநிலையில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அவரது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராட மிகப்பெரிய பலத்தை சுய ஊரடங்கு கொடுக்கும். தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரும் காலங்களில் உதவும். வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள், என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story