மோடியின் வெற்றிக்கு பிறகு அவரது 98 வயது தாய் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ இதோ!
Modi mother thanks to everyone for modis verdict
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சியான பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறையும் பின்தங்கியே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்று அணைத்து இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக ஆட்சி அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்ட நிலையில் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் குஜராத்தின் காந்திநகரில் வசிக்கும் 98 வயதான மோடியின் தாய் ஹீராபன் தனது வீட்டின் வெளியில் வந்து கூடியிருந்த ஊடகங்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார்.