பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடித்து கட்ட அதிரடி உத்தரவை பிறப்பித்த உ.பி அரசு!
modi
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நடந்தது.
அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் போது, படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். உடனே அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரை தாங்கி பிடித்தனர்.
இந்நிலையில் மோடி விழுந்த அந்தப் படிகட்டுகளை இடித்து சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அந்த படிக்கட்டு மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு, உயரம் சற்று குறைவாக தான் இருக்கும். இதற்கு முன்னர் ஒரு சில பேர் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர் என அம்மண்டல கமிஷ்னர் பாப்டே கூறியுள்ளார். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்து உள்ளனர்.